தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

0

அணைத்து தமிழ் சொந்தங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய போகிப் பண்டிகை நல்வாழ்த்துக்கள், பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

வாழ்க நலமுடன், வாழ்க வளமுடன்..

சூரிய உதயத்திற்கு முன்பாக குளித்து புத்தாடை அணிந்து முதல் நாளே குறித்து வைத்தபடி நல்ல நேரத்தில்பொங்கல் வைக்க முனைவார்கள். வீட்டு முற்றத்தில் கல் அடுப்பு கூட்டி ( கிராமங்களில் தான் பெரும்பாலும் அப்படி… நகர்ப்புறங்களில் எல்லாம் வீட்டுக்குள் தான். ) மாக்கோலமிட்ட புதுப்பானைக் கழுத்தில் இஞ்சி, மஞ்சள் செடி மாலையாக வளையமிட்டிருக்கும். பொங்கல் பானையை மையமாக வைத்து பெருக்கல் குறி போல தோகையுடன் கூடிய கரும்புகளை நிறுத்தி இருப்பார்கள். அறுவடையில் வந்த புதுநெல் அரிசியிட்டு, கரும்புச் சாறில் செய்தவெல்லம் இட்டு, பாலூற்றி, பசு நெய் விட்டு பொங்கல் வைப்பார்கள். உலை கொதித்து, பொங்கலின் மணம் நாசியில் நுழைய சுற்றி இருப்பவர்களின் கண்கள் மொத்தமும் பொங்கல் பானையின் மீதே இருக்க… ஆ யிற்று பொங்கல் பொங்கி வழிய ” பொங்கலோ பொங்கல் ” என்ற உற்சாக குரல்கள் பீறிட பொங்கல் தயார். குடும்பமே கூடிநிற்க, தலை வாழை இலை விரித்து, தேங்காய் உடைத்து, பூ, பழம் வைத்து, கற்பூரம் கொளுத்தி, கதிரவனுக்குபூஜை நைவேத்தியம் செய்து, பொங்கலையும் படையல்செய்து வணங்குவார்கள். எண்சாண் உடம்பும் பூமிதனியில்பட விழுந்து பாரதியின் சீர் பெறுவர். அதன் பின் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு பொங்கல் வழங்கி உண்டு மகிழ்வார்கள்.

இன மத பேதமின்றி தமிழர் என்கிற ஒரு குடையின் கீழ் அனவைரும் இணைந்து உவப்போடு தமிழர்திருவிழாவாக கொண்டாடுகிற பெருவிழா இந்தப் பொங்கல் திருநாள் ஒன்று தான்….

நன்றி!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *