Villupuram police news updates
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுபடி இன்று 30.05.2020 தேதி மதுவிலக்கு வேட்டைக்காக விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ரேணுகாதேவி, உதவி ஆய்வாளர் திரு.வீரசேகரன் மற்றும் காவல் ஆளுநர்கள் அன்பு, சிவகுமார் , வேலு, சுரேஷ் அனைவரும் மதுவிலக்கு வேட்டைக்காக சென்ற போது வீரபாண்டி கிராமம் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள செவ்வந்தல் ஏரிக்கரை அருகே சாராயம் விற்று கொண்டிருந்த வரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் சாராயம் காய்ச்சுவதாக கொடுத்த தகவலின் பேரில் ஒரு நீல நிற பேரலில் 200 லிட்டர் சாராய ஊரல்கள் மற்றும் 8 பிளாஸ்டிக் குடத்தில் 150 லிட்டர் விஷநெடி சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
விசாரணையில் இது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட எதிரிகள். 1) பிரபு 2) ஐயப்பன் 3) சீனிவாசன் 4) நிர்மலா 5) மணிவேல் அனைவரும் வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
மேற்படி எதிரிகளின் மீது வழக்கு பதியப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது.