ஆலயம் வெறும் கற்களல்ல, ஏழைகளின் படிக்கற்கள்

ஒரு ஆலயத்தில் திருவிழா நடந்தது…

பத்து பேர் பொம்மை கடை வைத்தனர்.
பத்து பேர் பூ மாலை கடை வைத்தனர்.
பத்து பேர் அர்ச்சனை பொருள் கடை வைத்தனர்.
பத்து பேர் தேனீர் கடை வைத்தனர்.
பத்து பேர் நொறுக்கு தின்பண்டம் கடை வைத்தனர்.
பத்து பேர் வீட்டு சாமான் கடை வைத்தனர்.
பத்து பேர் துணி கடை வைத்தனர்.
பத்து பேர் நாட்டு மருந்து கடை வைத்தனர்.
பத்து பேர் வாகனம் இயக்கினர்.
பத்து பேர் தண்ணீர் மோர் தானம் வழங்கினர்.
பத்து பேர் அன்னதானம் வழங்கினர்.
பத்து பேர் மருதானி இட்டனர்.
பத்து பேர் ஆபரணம் கடை வைத்தனர்.
பத்து பேர் பிச்சை எடுத்தனர்.
ஒரு திருவிழாவில் இத்தனை பேரும் இவர்கள் சார்ந்தாரும் பொருள் விற்று பொருள் ஈட்டனர்.சிலர் பொருள் கொடுத்து அருள் ஈட்டனர்.

நாத்திக கூட்டம் நடத்தும் போராட்டங்களிலும் ஆர்பாட்டங்களிலும் ஊர்வலங்களிலும் எத்தனை பேர் பிழைத்தார்கள்…. பிழைக்கிறார்கள்…?

இறைவன் மூடநம்பிக்கை அல்ல.
வாழ்க்கைக்கு கொடுக்கும் நம்பிக்கை.
ஆலயம் வெறும் கற்களல்ல.
ஏழைகளின் படிக்கற்கள்.