தமிழக முதல்வரின் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இன்றைய குறிப்பு -2

0

வெளிமாநில தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு உண்டான இரயில் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும். இதற்கான நிதி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கப்படும்

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிக மொத்த காய்கறி சந்தை அமைப்பதற்காக நடைபெற்று வரும் பணிகளை, நாளை (9.5.2020) மாலை 4:30 மணியளவில் நானும், மாண்புமிகு துணை முதல்வர் @OfficeOfOPS அவர்களும் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.

பணியின் போது காலமான காவலர் திரு.சேட்டு அவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிலையிலிருந்து ரூ.50லட்சம் நிவாரணம் வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *