விஜய் சேதுபதியின் சர்ச்சை பேச்சு
எப்பொழுதோ பேசிய பேச்சு இப்பொழுது சர்ச்சையை கிளப்புகிறது.. இப்பொழுது தான் ஜோதிகாவின் பேச்சுக்கு சாணியை கரைத்து மெழுகிய மக்கள் இப்பொழுது இந்து மதத்திலிருந்து கிருத்துவ மதத்தை தழுவியதாக கூறப்படும் விஜய் சேதுபதியின் இந்து கோவில்களில் அபிஷேகம் நடத்துப்படுவது குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வழக்கு பதித்து உள்ளனர். கூத்தாடி கூத்தாடி தான்… எவனோ எழுதுவதை நடித்து பேசுபவன் இப்படி தான் பேசுவான்.. சொந்த சரக்கு ஒன்றும் இருக்காது…
கடவுள் நம்பிக்கையுள்ளவர்களை சாடும் வகையில் இருந்தது அவரது பேச்சு. அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் அவரது பேச்சுக்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது.
தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதி, கோவில்களில் அபிஷேகம் நடத்துவதை கொச்சைப் படுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.
ஒரு கோவிலில் சாமிக்கு அபிஷேகம் செய்யப்படுவதை பார்த்த ஒரு சிறுமி, அபிஷேகம் முடிந்ததும் திரைப் போட்டு மறைக்கப்பட்டதை பார்த்து ஏன் மறைக்கிறார்கள்.
அதற்கு அந்த தாத்தா சாமிக்கு குளிக்கும் போது காட்டுவார்கள், ஆனால் உடை மாற்றும் போது மறைத்து விடுவார்கள் என விளக்கம் கொடுத்தாராம். அதனை ஏற்காத சிறுமி, சாமி குளிப்பதையே காட்டுகிறார்கள் உடை மாற்றுவதை காட்டினால் என்ன என அந்த சிறுமி கேள்வி கேட்டுள்ளார்.
இதையே கிரேஸி மோகன், சாக்லேட் கிருஷ்ணா நாடக நிகழ்சியில் இதே நிகழ்வுகளை வேரு ஒரு நிகழ்வுகளின் தொகுப்பாக பேசினார். அதில் ஆபாசம் தெரியவில்லை.. ஆனால் வேறு மதத்தவர் பேசும் பொழுது வேண்டுமென்றே பேசுவது போல் உள்ளது. ஏன் அவர்களின் மதத்தில் உள்ள கோட்பாடுகளை குறித்து பேசுவது தானே… ஊரான் வீடு பற்றி எறிந்தால் நாம் குளிர் காய்வோமே என்று ஒரு ஆசை தான்.
தமிழ்நாட்டில் திமுக திக போன்ற காட்சிகள் இந்து எதிர்ப்பு கொள்ககைகளை பேசி வரும்போது தமிழ் மக்களால் முன்னே வந்த இந்த விஜய் சேதுபதி பேசுவது சர்ச்சையை உண்டாக்குவது மட்டுமல்ல, வேண்டுமென்றே இந்து மதத்தை கொச்சை படுத்தி, கிருத்துவ மதத்துக்கு ஆதரவாக பேசுவது போல் உள்ளது என்று பலர் கருதுகின்றனர்.
ட்விட்டரில் கேவலமாக பல கருத்துக்கள் விஜய் சேதுபதிக்கு பதிலடியாக கொடுக்க பட்டு வருகிறது. அதை படித்தால் தூக்கு மாட்டி கொள்ள வேண்டியது தான்..ராஷ்டிரிய இந்து மக ஜன சபா கட்சியினர் சேதுபதியின் மேல் வழக்கு பதிந்து உள்ளனர்.