Chennai police news updates
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் எழும்பூர் காவலர் மருத்துவமனைக்கு பாரத ஸ்டேட் வங்கியால் நன்கொடையாக வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொண்டு காவலர் மருத்துவமனைக்கு பயன்பாட்டிற்காக வழங்கினார்.
சென்னை பாரத ஸ்டேட் வங்கி, எழும்பூர் காவலர் மருத்துவமனைக்கு 5 Cot & Bed, 10 Stretchers, 10 Wheel Chairs, 5 IV Stands, 2 Thermometers ஆகிய மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
30.05.2020 அன்று காலை எழும்பூர், காவலர் மருத்துவமனையில் மேற்படி மருத்துவ உபகரணங்களை காவல் ஆணையாளரிடம் முறைப்படி ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொண்டு காவலர் மருத்துவமனைக்கு பயன்பாட்டிற்காக வழங்கினார். மேலும் நன்கொடையாக மருத்துவ உபகரணங்களை வழங்கிய வங்கி உயர் அதிகாரிகளுக்கு காவல் ஆணையாளர் நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) திரு.எச்.எம்.ஜெயராம், இ.கா.ப., துணை ஆணையாளர்கள் திருமதி.விமலா, (தலைமையிடம்) திரு.சுதாகர் (நுண்ணறிவுப்பிரிவு) சென்னை பாரத ஸ்டேட் வங்கி துணை பொது மேலாளர்கள் திரு.சத்யபிரகாஷ், திரு.அதுல் ஶ்ரீவத்சவா, எழும்பூர் காவலர் மருத்துவமனை Chief Medical Officer திருமதி.சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.