Chennai police news updates -19th June
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கையொட்டி காவல் குழுவினர் திருவல்லிக்கேணி , அண்ணாசாலை பகுதியில் மேற்கொண்ட வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார்.
முழு ஊரடங்கையொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் இன்று 19.06.2020 காலை திருவல்லிக்கேணி, அண்ணாசாலையிலுள்ள, அண்ணா சிலை அருகே காவல் குழுவினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார். மேலும் பொதுமக்களை கண்காணிக்க போலீசாரால் பயன்படுத்தப்படும் DRONE CAMERA -வின் இயக்கத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த DRONE CAMERA -வில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தொடர்பான விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்படுவது பற்றியும் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின் போது கூடுதல் ஆணையாளர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப (தெற்கு), இணை ஆணையாளர் (கிழக்கு) திரு.ஆர்.சுதாகர், இ.கா.ப, திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் திரு.கு.தர்மராஜன், இ.கா.ப ஆகியோர் கலந்து கொண்டனர்.