Chennai police news updates
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 19.06.2020 -ம் தேதி மாலை 06:30 மணிக்கு அண்ணாநகர், அமைந்தகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா வளைவு அருகே சென்னை பெருநகர காவல்துறையால் ஊரடங்கை முன்னிட்டு, ட்ரோன் (Drone) கேமராக்கள் மூலம் மக்கள் நடமாட்டம், மற்றும் வாகன தணிக்கையை ஆய்வு செய்து, அறிவுரை வழங்கினார்கள்.
உடன் வடக்கு மண்டல கூடுதல் ஆணையாளர் திரு.ஆர்.தினகரன், இ.கா.ப., மேற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.விஜயகுமாரி, இ.கா.ப., அண்ணாநகர் துணை ஆணையாளர் திரு.எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப., மற்றும் அண்ணாநகர் போக்குவரத்து துணை ஆணையாளர் திரு.எம்.எம்.அசோக்குமார் ஆகியோர் இருந்தனர்.