Chennai police updates on facebook

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் 18.05.2020 அன்று காவல் ஆளிநர்களுக்கு முகக்கவசம் மற்றும் திரவ சுத்திகரிப்பான் வழங்கி கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.



சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன் இ.கா.ப அவர்கள் 18.05.2020 அன்று மாலை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்புக்கு சென்று காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர்களுக்கு திரவ சுத்திகரிப்பான் (Hand Sanitizer), சோப்பு, முககவசம் மற்றும் கபசூர குடிநீர் அடங்கிய தொகுப்பை வழங்கி கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) திரு.எச்.எம்.ஜெயராம், இ.கா.ப, வடக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.கபில்குமார் சி.சரத்கர், இ.கா.ப, இணை ஆணையாளர் (தலைமையிடம்) திரு.ஏ.ஜி.பாபு, இ.கா.ப, பூக்கடை துணை ஆணையாளர் திரு.எஸ்.ராஜேந்திரன், இ.கா.ப, துணை ஆணையாளர் (தலைமையிடம்) திருமதி.எஸ்.விமலா ஆகியோர் கலந்து கொண்டனர்.