கொரோனாவிற்கு சித்த மருத்துவமும் ஆங்கில மருத்துவமும்

0

நல்ல செய்தி.
வரவேற்போம்.
வாழ்த்துவோம்.

சித்த மருத்துவர் வீரபாபு மற்றும் ஆங்கில மருத்துவர் பாலாஜி இருவருக்கும்  வாழ்த்துக்கள்.

சாமானிய மக்களின் மனதில் எழும் சந்தேகங்கள் சில.

ஆங்கில மருத்துவத்துடன் சித்த மருந்துகளை கொடுத்தால் நான்கு நாட்களிலேயே குணம் தெரியும் பொழுது, இத்தனை நாட்களாகஇதனை பரீட்சித்துப் பார்க்க எது தடையாக இருந்தது?எது தடுத்தது?

சித்த மருத்துவர்கள் எவரும், இதுநாள் வரை, நம் நாட்டு பாரம்பரிய சித்த மருந்துகளால் Corona வைரஸை எதிர்த்து போராட மற்றும் வெற்றிகொள்ள முடியும் என்ற தகவலை ஊருக்கு உரக்கச் சொல்லாமல் விட்டது எதனால்? யாரால்?

மருத்துவப் பட்டமே பெறாத ஒரு நபர் (பாரம்பரிய சித்த மருத்துவர்) சித்த மருத்துவத்தில் சிறப்பான சிகிச்சை முறை மற்றும் சித்த மருந்துகள் உள்ளன என்று தினம் தினம் உலகுக்கு உரக்க சொன்ன போது, சித்த மருத்துவ பட்டம் பெற்ற நீங்கள் அதனை நம்பாமல், 2019 ஆம் ஆண்டில் வந்த Corona வைரசுக்கு எப்படி இவரால் மருந்து கண்டுபிடித்து இருக்க முடியும் என்று எதிர்க் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தீர்களே,இது சரியா? இது முறையா?

அவர் மீது வழக்கு போடுவதில் இருந்த ஆர்வத்தில்,சிறிதேனும் தாங்கள் சிறப்பாக படித்து பட்டம் பெற்ற சித்த மருத்துவத்தின் மேல் கவனம் செலுத்தி இருந்தால், இந்த வாரம் உங்கள் கண்களுக்கு கிடைத்த சித்த மருந்துகள், சென்ற மார்ச் மாத இறுதியிலேயே உங்கள் கண்களுக்கு தெளிவாக தெரிந்திருக்குமே?

இதுவரை உயிரிழந்த மக்களுக்கு யார் பதில் சொல்வது?இதற்கு
யாரை குறை சொல்வது? யாரை குற்றம் சொல்வது?

இனியாவது தெளிவாக மருந்துகளை தேடுவதில் உங்கள் கவனத்தை திருப்பினால் சித்த மருத்துவம் உலக அளவில் போற்றப்படும்.

அக்காலத்தில் சேவையாக இருந்த மருத்துவம், இக்காலத்தில் மருத்துவ தொழிலாக மாறிவிட்டது.

சேவையாக இருந்தவரை, நோயாளியின் குணம் மட்டுமே மருத்துவரின் கண்களுக்கு புலப்பட்டது. அதன் காரணமாக நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை தன்னிடம் இல்லை என்றாலும் கூட, உடனடியாக உரியவர்களிடம் செல்ல வழிகாட்டுவார்கள். ஆனால்

இன்று தொழிலாக மாறி விட்ட பின், நோயாளிக்கு உகந்த சிகிச்சை தம்மிடம் இல்லை என்றாலும், அதை அவரிடம் கடைசிவரை சொல்லாமல், சிகிச்சை மட்டுமே அளிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்? தர்மம்?

பொது மக்களின் உயிர் விலை மதிப்பற்றது. இதில் நீயா? நானா? என போட்டி போடுவது சரியல்ல.

Corona படம் கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் காட்சி நெருங்கும் சமயத்தில்,
எங்களிடம் சித்த மருந்துகள் உள்ளது என்று கூறுவது எப்படி இருக்கிறது என்றால், தன் வீட்டு சுவற்றில் ஆணி அடிக்க ஊரெல்லாம் சுத்தியல் கேட்டு அலைந்து திரிந்து விட்டு, அவர்கள் இல்லையென சொன்ன பின், தன் வீட்டினில் உள்ள சுத்தியலை எடுத்து ஆணியை அடிப்பதற்கு ஒப்பாகும்.

சிறு குறிப்பு : நம்மை ஆண்ட கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்களும் படிக்காதவர் தான்.

இன்றுபோல் அன்றும், படிக்காத காமராஜர் ஐயா சொல்லும் எந்த திட்டத்தையும் நாங்கள் செயல் படுத்த மாட்டோம் என்று அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டு இருந்தால், உங்களால் மருத்துவ படிப்பு படித்திருக்க முடியுமா?
சிந்தித்துப் பாருங்கள். அனைத்து மருத்துவர்களும் சிறப்பான சேவை வழங்க வாழ்த்துக்கள்.

வாழ்க வையகம்.

வாழ்க வளமுடன்.

வாழ்க நலமுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *