Chennai police News updates- 21st May 2020

0

தமிழ்நாடு காவல் நண்பர்கள் குழு சார்பாக காவல்துறை இயக்குநர் மற்றும் காவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் ஆளிநர்களுக்கு சத்து பானம் மற்றும் பொருட்கள் வழங்கினர்.

டாக்டர் பிரதீப் வி.பிலிப், இ.கா.ப., தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இணைந்து தமிழ்நாடு காவல் நண்பர்கள் குழு மற்றும் துரை பவுன்டேசன் சார்பாக, இன்று 21.05.2020 காலை இராயப்பேட்டை, மியூசிக் அகாடமி அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு சத்து பானங்கள் (Energy Drinks) மற்றும் Candid Dusting Powder போன்ற பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு 4,000 சத்து பானங்கள் மற்றும் சரும தொற்று ஏற்படாமல் தடுக்க 4,000 Candid Dusting Powder ஆகியவை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், துரை பவுன்டேஷனின் செயலாளர் மருத்துவர் சுமித்ரா பிரசாத், சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் இணை ஆணையாளர் (தெற்கு) திரு.க.எழிலரசன், இ.கா.ப., துணை ஆணையாளர்கள் திரு.பெரோஸ்கான் அப்துல்லா, இ.கா.ப., (போக்குவரத்து/கிழக்கு), திரு.தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., (மயிலாப்பூர்) திரு.ஆர்.திருநாவுக்கரசு, இ.கா.ப., (நுண்ணறிவுப்பிரிவு) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *