Announcement of Tamilnadu CM OPS on 16th May, 2020
செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் உதடசைவு மூலம் தகவல் பரிமாற்றம் செய்ய உதவும் வகையில் சிறப்பு “உதடு மறைவற்ற முக கவசங்கள்” தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன்மூலம் ரூ.12.15 லட்சம் மதிப்பில் 81000 சிறப்பு முக கவசங்கள் வழங்கப்படுகின்றன.
சொந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு பயண செலவுகளை அரசே ஏற்று தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதால்,
வெளி மாநில தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடை பயணமாகவோ, பிற வாகனங்கள் மூலமாகவோ செல்ல வேண்டாமெனவும் அதுவரை முகாம்களிலேயே தங்கியிருக்கவும் கேட்டுக் கொள்கிறேன்.