Chennai city police news updates

0

நேற்று 23.05.2020 இரவு மும்பையிலிருந்து சென்னைக்கு 1500 தமிழர்கள் பயணம் மேற்கொண்டனர். அவர்களுக்கு இன்று 24.05.2020 காலை வரை உணவு இருந்தது. இன்று மதியம் அவர்களுக்கு உணவு கிடைப்பதற்கு வாய்ப்பில்லையென சென்னையிலிருக்கும் பூமிகா டிரஸ்டுக்கு தெரியவந்தது.

உடனே பூமிகா டிரஸ்டின் நிறுவனர் அவர்கள் சென்னை மாநகர காவல் ஆணையாளர் திரு. அ.கா. விசுவநாதன், இ.கா.ப., அவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

மதிய உணவு நேரத்தில் அந்த இரயில் ஆந்திர மாநிலத்திலுள்ள குண்டக்கல் இரயில் நிலையத்திற்கு வரும் என்பதை அறிந்து அனந்தபூர் SP திரு. சத்திய ஏசு பாபு, இ.கா.ப., அவர்களுக்கு சென்னை காவல் ஆணையாளர் அவர்கள் தகவல் தெரிவித்தார்.

மேலும் 1500 தமிழர்களுக்கு வழங்குகின்ற உணவிற்கான பணத்தினை அனுப்புவதாகவும் தெரிவித்தார். இத்தகவலை அனந்தப்பூர் மாவட்ட குண்டக்கல் SP, ஆந்திர மாநில DGP திரு.தாமோதர் கவுதம் சவாங் இ.கா.ப., அவர்களிடம் தெரிவித்தார்.

தகவலறிந்த DGP அவர்கள் மேற்படி உணவில்லாமல் இரயிலில் பயணம் செய்யும் தமிழ் மக்களுக்கு உதவி செய்வதற்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு இது, அதனால் நாமே உணவினை நம் சொந்த செலவிலேயே ஏற்பாடு செய்யலாம் என்று தெரிவித்ததோடு, 1500 தமிழ் பயணிகளுக்கும் பிரியாணி, சீரக அரிசி மற்றும் கலவை சாதங்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், பன்கள் மற்றும் 1500 மினரல் வாட்டர் பாட்டில்கள் ஆகியவற்றை இன்று மதியம் 03.00 மணிக்கு வழங்கினார். உணவுகளை பெற்றுக் கொண்ட பயணிகள் மிகவும், மகிழ்ச்சியடைந்தனர்.

#ChennaiPoliceCommissioner

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *