கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, 1 உதவி ஆய்வாளர் உட்பட 62 ஆயுதப்படை ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை பெருநகர காவல், ஆயுதப்படையில் பணிபுரியும் 1 உதவி ஆய்வாளர், 49 காவலர்கள் மற்றும் 12 பெண் காவலர்கள் என மொத்தம் 62 காவல் ஆளிநர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர். 30.05.2020 அன்று பணிக்கு திரும்பிய மேற்படி 62 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் புதுப்பேட்டை, ராஜரத்தினம் மைதானத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வாழ்த்துகளை தெரிவித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் காவல் ஆணையாளர் அனைத்து போலீசாருக்கும் கபவாத சூப் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) திரு.எச்.எம்.ஜெயராம், இ.கா.ப., இணை ஆணையாளர் (தலைமையிடம்) திரு.ஏ.ஜி.பாபு, இ.கா.ப., துணை ஆணையாளர்கள் திரு.ஆர்.திருநாவுக்கரசு, இ.கா.ப., (நுண்ணறிவுப்பிரிவு), திரு.எம்.சுதாகர், (நுண்ணறிவுப்பிரிவு) ஆயுதப்படை துணை ஆணையாளர்கள் திரு.கே.சௌந்தர்ராஜன், திரு.ஆர்.ரவிச்சந்திரன், திரு.கே.சோமசுந்தரம் (மோட்டார் வாகனப்பிரிவு) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *