Chennai police updates
உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்த மாம்பலம் காவல் ஆய்வாளரின் திருவுருவ படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்
சென்னை பெருநகர காவல், R-1 மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.S.பாலமுரளி அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தவர், சிகிச்சை பலனின்றி 17.6.2020 அன்று உயிரிழந்தார். இவர் மனைவி, மகன் மற்றும் மகளுடன் வடபழனி காவல் குடியிருப்பில் வசித்து வந்தார்.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.J.K. திரிபாதி, இ.கா.ப., அவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இன்று 18.6.2020 காலை R-1 மாம்பலம் காவல் நிலைய வளாகத்தில், மறைந்த காவல் ஆய்வாளர் திரு.S.பாலமுரளி அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் திரு.ஆர்.தினகரன், இ.கா.ப. (வடக்கு), திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப., (தெற்கு), திரு.ஏ.அருண், இ.கா.ப., (போக்குவரத்து), திரு.எச்.எம்.ஜெயராம், இ.கா.ப., (தலைமையிடம்), காவல் இணை ஆணையாளர்கள் திரு.ர.சுதாகர், இ.கா.ப., (கிழக்கு மண்டலம்), திருமதி.சி.மகேஸ்வரி, இ.கா.ப., (தெற்கு மண்டலம்), திரு.க.எழிலரசன், இ.கா.ப., (போக்குவரத்து/தெற்கு). காவல் துணை ஆணையாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.