சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காவலர்களுக்கு வெட்டி வேரால் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை வழங்கினார்.

“ELITE GROUP OF COMPANIES” நிர்வாகத்தின் சார்பாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய வெட்டி வேரால் தயாரிக்கப்பட்ட 1000 முகக்கவசங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் வழங்கியதை 28.05.2020 அன்று காலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெட்டி வேரால் தயாரிக்கப்பட்ட மருத்துவகுணம் கொண்ட மேற்படி முகக்கவசங்களை காவலர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமையிட கூடுதல் ஆணையாளர் திரு.எச்.எம்.ஜெயராம், இ.கா.ப., (பொறுப்பு வடக்கு மண்டலம்), இணை ஆணையாளர் திரு.ஏ.ஜி.பாபு, இ.கா.ப, (தலைமையிடம்) துணை ஆணையாளர்கள் திரு.ஆர்.திருநாவுக்கரசு, இ.கா.ப, (நுண்ணறிவுப்பிரிவு) திரு.எம்.சுதாகர், (நுண்ணறிவுப்பிரிவு) திருமதி.விமலா, (தலைமையிடம்) திரு.எஸ்.ஆர்.செந்தில்குமார் (நிர்வாகம்), ELITE GROUP OF COMPANIES CEO திரு.சி.எம்.ஜெயச்சந்திரன், முன்னாள் ஜனாதிபதி உயர்திரு. A.P.J. அப்துல்கலாம் அவர்களின் ஆலோசகர் திரு.வி.பொன்ராஜ் மற்றும் FAIRA TV (Youtube) President திரு.ஏ.ஹென்றி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *