படித்ததில் ரசித்தது -1

0

Relax …

ஒருவர் டைலர் கிட்ட சட்டை தைக்கத் துணி எடுத்துகிட்டுப் போனாரு.
டைலர் துணியை அளந்து பாத்துட்டு,துணி பத்தாதுன்னு சொல்லி திருப்பிக் கொடுத்துட்டார்.
.
அவரும் வேறு ஒரு டைலர் கிட்ட இதே துணியை எடுத்துகிட்டு போனாறு.
டைலர் அளந்து பாத்துட்டு, இவருக்கும் அளவு எடுத்து கிட்டு 5 நாள் கழிச்சு வரச் சொன்னார்.
.
5 நாள் கழிச்சு இவுரு போனாறு.
சட்டை ரெடி.போட்டுப் பாத்தாரு. சரியா இருந்தது.
அப்ப டைலரோட மகன் சின்னப் பையன் அங்கு வந்தான், ஒவனும் இவர் குடுத்த அதே துணியில் சட்டை போட்டிருந்தான்.
.
இவரு ஒண்ணும் பேசலை.
நேரா விருவிருன்னு பழைய டைலர் கிட்ட வந்தாரு. யோவ், நீ தைக்க.மாட்டேன் , துணி பத்தாதுன்னு சொன்னே இதப்பாருய்யா நான் சட்டை போட்டிருக்கேன், அதுவில்லாம அவர் மகனுக்கும் இதே துணில சட்டை தெச்சுப் போட்டிருக்காரு. நீ டைலரே இல்லைன்னு சத்தம் போட்டாரு.
.
அந்த டைலர் கேட்டாரு, சார் அந்தப் பையனுக்கு என்ன வயசிருக்கும்ன்னு .
.
என்ன ஒரு இரண்டு வயசு இருக்கும்ன்னாரு.
.
*உடனே டைலர் சொன்னாரு

என் மகனுக்கு ஒம்பது வயசு.*
.
… வாழ்க வளமுடன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *